தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்பாசனத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் வயல் காணிகளில் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் காணிகளில் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக விவசாய அமைச்சு விபரங்களை வெளியிட்டுள்ளது.
சமநல குளத்திற்கு உடவளவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவ்வாறு நீர் விநியோகிக்கப்பட்டால் தெற்கு பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்விநியோகத் தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.