இம்முறை பெரும்போகத்தில் உற்பத்திக்கு ஏற்ற வகையில் மழை பெய்துள்ளது. பெரும்போக மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயரதிகாரி தெரிவிக்கையில், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பொதுவான மழை வீழ்ச்சி காணப்படும் என்றார். இருப்பினும் வடக்கு, தெற்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுவான மழை வீழ்ச்சியிலும் பார்க்க அதிக மழை வீழ்ச்சி இடம்பெறவுள்ளது. இதனால் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாக பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது நிலவும் காலநிலை மாற்றம் கடும் மழையைப் போன்று வறட்சி நிலையும் ஏற்படக்கூடும். இவ்வாறான நிலைமையில் உற்பத்திகளுக்கான பாதி;ப்பை தவிர்த்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட தினத்தில் பயிர் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது முக்கியமாகும். இது தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, ரொஷான் ரணசிங்ஹ மற்றும் விவசாய, மகாவலி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுகளின் செயலாளர்கள் அடங்கலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை ஹெக்டர் கொப்பேகடுவ, விவசாய ஆய்வு திணைக்களத்தில் இடம்பெற்றது.