இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் ஐயாயிரத்து 91 (5,091) பேர் தென் கொரிய வாய்ப்புகளை பெற்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்
2022 ஆண்டில் முதல் 9 மாத காலப்பகுதியில் தென் கொரியாவில் தொழிலுக்காக சென்ற ஊழியர்களின் எண்ணிக்கை மூவாயித்து 460. இந்த வருடத்தில் முதல் 9 மாத காலப்பகுதயில் இத்தொகை 44 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையர்களுக்கு மேலும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை அமைச்சர் நடத்தியுள்ளார். இதேவேளை, கொரிய நட்டின் உற்பத்தித்துறையில் தொழில்வாய்ப்புகளை பெற்ற 54 இலங்கையர்கள் கடந்த அங்கு சென்றுள்ளதுடன் உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில் துறைகளில் தொழில் வாய்ப்புகளை பெற்ற 36 பேர் கொரியாவுக்கு பயணமானார்கள் .2023 ஆண்டில் தென்கொரியாவுக்கு தொழிலுக்காக சென்ற 3,976 பேர் தென்கொரிய மொழி பரீட்சையில்
சித்தி அடைந்தவர்களாவர்.அத்தோடு 1,115 பேர் இதற்கு முன்னர் கொரியாவில் கடமையாற்றி மீண்டும் அங்கு தொழிலுக்காக (சுந-நவெசல) சென்றவர்கள். இந்த வருடத்தில் ஆண் ஊழியர்கள் 4,991பேர் தென்கொரியாவிற்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்.
இலங்கை இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கொரிய நாட்டின் தொழிலுக்காக சென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கமைவாக இளைஞர்கள் 100 பேர் குறுகி இக்காலப்பகுதியில் தென் கொரியாவுக்கு பயணமானார்கள்.
உற்பத்தி துறை தொழிலுக்காக 4,100 ஆண்களும் பெண்கள் 98 பேரும் சென்றுள்ளனர். கட்டுமாணத்துறைக்காகவும் 147 ஆண்களும் அங்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்.தென்கொரியாவில் மீன்பிடி தொழில் துறையில் ஆண்கள் 741 பேரும், இரண்டு பெண்களும் அங்கு சென்றுள்ளனர்.விவசாயத் தொழில் துறைக்கு ஆண் தொழிலாளர்கள் மூவர் சென்றுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தென்கொரிய மனித வள அபிவிருத்தி சேவை நிறுவனத்திற்கிடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கையர்களுக்கு தென் கொரியாவல் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 2004 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக
இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு தொழிலுக்காக செல்லுகின்றனர். அத்தோடு தென்கொரியாவில் தொழிலுக்காக செல்வதில் இளஞர்கள் கூடுதலாக ஆர்வங்கொண்டுள்ளனர்.
தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சராக திரு மனுஷ நாணயக்கார கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் பெரும் எண்ணிக்கையில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தார். தாமதமான நிலையில் காணப்பட்ட இந்த தொழில் வாய்ப்புகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது