‘என்னுடன் ஆரம்பிப்போம்’ என்ற பேட்ஜ் (குறியீட்டுச் சின்னம்) மனுஷவினால்  ஜனாதிபதிக்கு அணிவிப்பு

ஸ்மார்ட் நாட்டுக்காக ‘அமைப்பு முறையில் மாற்றம்’ மேற்கொள்வதன் மூலம் 2048 ஆம் ஆண்டுக்குள் பொருளாதார ரீதியாக சுதந்திரமான நாட்டை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ‘என்னுடன் ஆரம்பியுங்கள்’ நிகழ்ச்சித் திட்டம் சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜக்கிய தேசியக்கட்சியின் விசேட மாநாட்டில் ஆரம்பமானது.

ஸ்மார்ட் நாட்டை உருவாக்கும் வேலைத்திட்டம் ‘என்னில் இருந்து ஆரம்பிப்போம்’ என திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விசேட மாநாட்டில் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து   தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார , ‘என்னில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற குறியீட்டுச் சின்னத்தை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிகழ்ச்சிகளுடன், என்னுடன் தொடங்குவோம் என்ற வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன்  கட்சி மாநாட்டிற்கு வந்திருந்த உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன