ஊடகவியலாளர் -அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட “The Right Eye” நூல்

தற்போதைய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், ஊடகவியலாளர் என்ற ரீதியில் செயல்பட்ட மனுஷ  நாணயக்கார அவர்களினால்  எழுதப்பட்ட ‘த ரைட் ஐ’  “The Right Eye” என்ற நூல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் (24) வெளியிடப்பட்டது.

ஒரு இளம் வலது சாரி அரசியல்வாதி, இதுவரையில் தொழிலாளர் அமைப்பு தொடர்பாக ,தொழிலாளர் இயக்கத்தை வலதுசாரிக் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்யும் முதல்   நூல் இதுவாகும்.

இலங்கையின் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு தொடர்பாக  வலதுசாரிப் பகுப்பாய்வுடன் ஒரே நூலில்  அறிந்துகொள்ள இதன் மூலம் வாய்ப்பு கிட்டுவதுடன் ,முழு தொழிலாளர் இயக்கம் மற்றும் எதிர்கால தொழில் சந்தை பற்றிய தெளிவான பார்வையையும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் இயக்கம் தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள நூல்கள், வெளியீடுகள் அனைத்தையும் ஆய்வு செய்து, தொழிலாளர் வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வுகளின் யதார்த்தத்தை வெளிக்கொணர இதன் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எந்த அரசியல் அமைப்புக்கும் சாதகமாக இல்லாத ஒரு நடுநிலையான பகுப்பாய்வை இது உள்ளடக்கியுள்ளது.

ஊடகவியலாளராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்து இந்த நூல் ஆசிரியர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஊடகச் செயலாளராகப் பணிபுரிந்த காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நுணுக்கமாக ஆராயும் வாய்ப்பு கிடைத்ததுடன்  இது ஒட்டுமொத்த தொழிலாளர்கள் தொடர்பிலான ஆய்வுக்கும் வழிவகுத்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அரசியலில் பிரவேசித்ததன் மூலம் இந்த ஆய்வை அரசியல் கோணத்தில் பார்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வலதுசாரி அரசியலில் ஏற்பட்ட அனுபவங்களும், இடதுசாரி சார்பு அரசியல் நீரோட்டமும் தொழிலாளர் பற்றிய நடுநிலை ஆய்வுக்கான வாய்ப்பு கிட்டியது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உலகின் தொழிலாளர் தேவை குறித்து நெருக்கமான ஆய்வுக்கான வாய்ப்புக்கான சந்தர்ப்பமும் கிடைத்தது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் என்ற வகையில், எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற தொழிலாளர்களை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளதுடன்  நூலாசிரியர், நலிவடைந்த தொழிலாளி பற்றிய எதிர்கால பார்வையையும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன