உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை ,இலங்கை வரவு செலவுத் திட்ட உதவியாக பெற்றுள்ளது.
இந்த நிதி உதவி தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிக்கையில், உலக வங்கியினால் உறுதியளிக்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றார்.
உலக வங்கியின் பணிப்பாளர் சபை கடந்த வாரம் இலங்கைக்கு அடிப்படையான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்காக இரண்டு நடவடிக்கைகளுக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு அனுமதி வழங்கியது.
இந்த நிதியானது மேக்ரோ – பருப்பொருளியல் நிலைத்தன்மை மற்றும் தற்போதைய பொருளாதார தாக்கத்தைத் தணித்தல் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், வறுமைக்கு உட்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்கால பொருளாதார தாக்கத்தை குறைக்கவும் தனியார் துறை தலைமையிலான மீட்பு மற்றும் வளர்ச்சிக்கும் உதவும் என்று உலக வங்கி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.