உயர்  நடுத்தர மக்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு வீடுகள்

நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினருக்கான 9 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டங்கள் மாகும்புர, மாலபே, பொரலஸ்கமுவ, ஸ்டேடியம்கம, ஒருகொடவத்த கட்டம் 1 மற்றும் 2, பேலியகொட கட்டம் 1 மற்றும் 2, அனுராதபுரம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த 9 வீட்டுத் திட்டங்களும் 2918 வீடுகளைக் கொண்டவை. இந்த வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் 2021 இல் தொடங்கப்பட்டன. ஆனால் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிற காரணங்களால் இந்த வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த வீட்டுத்திட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துகின்றன.

இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு 700 சதுர அடிகளைக் கொண்டது. மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டின் அளவு 900 சதுர அடிகளாகும்.

நடுத்தர வர்க்கத்தினரின் வருமான நிலைக்கு ஏற்றவாறு இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதன்படி, நடுத்தர வருமானம் பெறும் பிரிவினர் வீட்டு வசதிக்கான தடைகளை நீக்கி, பணியிடங்களை எளிதில் சென்றடைய முடியும் என்றும், நடுத்தர வருமானம் பெறும் பிரிவினர் நகர்ப்புறங்களில் குடியேற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த வீட்டுத் திட்டங்களை முன் விற்பனை அடிப்படையில் நிர்மாணித்து வருகின்றது. வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான வங்கி வசதிகளும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் செய்யப்படுகின்றன.

இதன்படி, மாலபே, மாகும்புர, பொரலஸ்கமுவ மற்றும் ஒருகொடவத்த வீடமைப்புத் திட்டங்களில் பல வீடுகளுக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன