இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு:அமைச்சர் மனுஷ நாணயக்கார போலந்து பொது போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை

அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் போலந்து பொது போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை இன்று (10) நடைபெற்றுள்ளது.

போலந்து நாட்டின்  பொதுப் போக்குவரத்துத் துறையில் இலங்கைத் திறன்மிக்க தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார  போலந்து பொதுப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார மற்றும் தொழில் வாய்க்புக்கான தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடனான வெற்றிகரமான சூழ்நிலையை எதிர்பார்த்து, நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பும் சாதகமான கருத்து பரிமாறலை மேற்கொண்டனர்.

திறமையான இலங்கை மனித வள படையணிக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக போலந்தில் நிலவும் மனிதவள தேவையை விசேடமாக போக்குவரத்து துறையின் பாரிய வாகன துறையில் உள்ள தேவைகளை புரிந்து கொள்ளவதற்குமாக  அமைச்சர் திரு.நாணயக்காரவின் ஒரு பரந்த முன்முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்திருந்தது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் திரு. சூரஜ் தந்தெனிய மற்றும் பொது முகாமையாளர் திரு. மங்கள ரந்தெனிய. அமைச்சரின் ஆலோசகர் மற்றும் பிரத்தியேக செயலாளர் திரு.ஷான் யஹம்பத் மற்றும் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் திரு.பாக்ய காரியவசம் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன