இலகுரக ரயில் திட்டம்: மீள ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் ஜப்பானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக இந்த அனுமதி கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனால் ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் போது இலங்கை தொடர்பில் ஜப்பான் கொண்டிருந்த மனத்தாங்கலை சரி செய்ய முடிந்ததாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன