இந்தியாவில் பத்து கோடி பேருக்கு நீரிழிவு நோய்

இந்தியாவில் பத்து கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்வு பேரவை நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை தமிழ்நாட்டில் மாத்திரம் ஒரு கோடி பேருக்கு இந்த நோய் இருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து இந்திய மாநிலங்களிலும் மக்கள் தொகை அடிப்படையில் விரிவாக நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். இந்த ஆய்வு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றா நோய்களும் அவற்றுக்கான முக்கிய காரணிகளும் மக்களிடம் எவ்வளவு பரவி உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 11.4% பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. நகர்ப்புறங்களில் 16.4%  பேருக்கும், கிராமப்புறங்களில் 8.9% பேருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் 14.4%  பேருக்கு அதாவது சுமார் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருக்கும் ஐந்தாவது மாநிலமாக தமிழகம் உள்ளது.

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில், அதாவது எதிர்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்கள் pre diabetic எனப்படுகிறார்கள். இந்தியாவில் 15.3% பேர் pre diabetic பிரிவில் உள்ளனர். இந்த பிரிவில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் வித்தியாசம் இல்லை. நகர்ப்புறங்களில் 15.4% பேருக்கும் கிராமபுறங்களில் 15.2% பேருக்கும் உள்ளது. Pre diabetic பிரிவில் இருக்கும் 60% பேர் சர்க்கரை நோயாளிகளாக மாறுவதால் இது அபாயகரமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 10.2 % பேர் இந்த பிரிவில் உள்ளனர். அதாவது 80 லட்சம் பேர் உள்ளனர். 

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன