இந்தியாவில் 40 வீதமான முதியவர்கள் ஏழ்மையில் தவிப்பு

இந்தியாவில் 40 வீதமான முதியவர்கள் ஏழ்மையில் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொழில் , ஓய்வூதியம் மற்றும் வருமான நிலை ஆகியவற்றின் பகுப்பாய்வுபடி 18.7 சதவீத முதியவர்களுக்கு வருமானம் இல்லை என்பதை இந்த நிலை எடுத்துகாட்டுகிறது.
இந்தியாவின் 17 மாநிலங்களில் ,தேசிய அளவை விட இந்த எண்ணிக்கைஅதிகமாக உள்ளது. இந்தியாவின் உத்தரகாண்டில் 19.3 வீதம் முதல் லட்சத்தீவில் 42.4 வீதம் வரை உள்ளது. வயதானவர்களிடையே இந்த அளவு வறுமை அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சுகாதார நிலையை பாதிக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ,இந்தியாவில் வயதான பெண்களுக்கு அதிக ஆயுட்காலம் இருப்பதாக கூறி உள்ளது. இதனால் வயதான பெண்கள் விதவைகளாகவும், தனியாகவும், சொந்தமாக வருமானம் இல்லாமலும் குடும்பத்தையே முழுமையாக சார்ந்து வாழும் நிலையில் உள்ளனர். இதனால் இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வு கவலை அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன