இந்தியாவில் 2,000 ரூபா நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து இருந்து திரும்பப் பெறும் கால அவகாசம் நீடிப்பு

இந்தியாவில் 2,000 ரூபா நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் கால அவகாசத்தை அக்டோபர் 7ம் திகதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
‘2000 ரூபா நாணயத்தாள்களின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், 2000 ரூபாய் நாணயத்தாள்களின் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும், பொதுமக்களின் பணப்புழக்கத் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற மதிப்புகளில் உள்ள ரூபா நாணயத்தாள்களின் கையிருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது என்றும் கூறி 2000 ரூபாய் நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்வதாக ,கடந்த மே மாதம் 19ம் திகதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மேலும், பொதுமக்களுக்கு போதுமான அவகாசம் வழங்கும் வகையில், அனைத்து வங்கிகளும் 2023 செப்டம்பர் 30 வரை ரூ.2000 நாணயத்தாள்களை வைப்பீடு அல்லது மற்ற நாணயத்தாள்களாக மாற்றும் வசதியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக, 2023 மே 19 அன்று 3.56 லட்சம் கோடி 2000 ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருந்த நிலையில், 2023 செப்டம்பர் 29 அன்று வரை 3.42 லட்சம் கோடி 2000 ரூபாய் நாணயத்தாள், அதாவது 96% 2,000 ரூபா நாணயத்தாள் இதுவரை திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது, வெறும் ரூபா 0.14லட்சம் கோடி 2000 ரூபா நாணயத்தாள்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2000 மதிப்புள்ள ரூபா நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் கால அவகாசத்தை அக்டோபர் 7ம் திகதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன