TEj தேஜ் என்ற புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் இன்றுதெரிவித்துள்ளது.
புயல் காரணமாக வரும் 25-ம் திகதி வரை மீனவர்கள் அரபிக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதேபோல தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தொடர்ந்து வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
எதிரவரும் 26-ம் திகதி வரை வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். அதே நேரம் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இன்று திருநெல்வேலிஇ கன்னியாகுமரியில் இன்று (22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடுஇ புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் அரபிக் கடலில் நிலவிவரும் புயல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருந்தாலும்இ ஆரம்ப கட்டத்தில் வலு குறைந்து காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்இ ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.