அட்டாளைச்சேனை அஸ்ரப் வீதியின் மேற்குப் பக்க விவசாயக் காணிகள் சட்டவிரோதமாக மண் இடப்பட்டு நிரப்பப்படுவதை உடனடியாக தடை செய்யப்படுவதுடன் ஏற்கனவே நிரப்பப்பட்ட காணிகளில் உள்ள மண்ணை அகற்றுவதெனவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் தலைமையில் இந்த விடயங்களை அவதானிப்பதற்காக ஒரு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் செவ்வாய்கிழமை (11) திகாமடுல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. இதன் போது இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ் வருடத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விஇசுகாதாரம்இவீதி அபிவிருத்திஇ விவசாயம்இநீர்ப்பாசணம்இ விளையாட்டுஇ கட்டுமாண வேலைத்திட்டங்கள்இசெயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கான அனுமதியும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது