அம்பாறையில் விவசாயச் செய்கை மேற்கொள்வதற்காக மழை வேண்டி விசேட பிரார்த்தனை

2023/2024ம் ஆண்டு பெரும் போக நெற் செய்கைக்கான ஏர்பூட்டு விழா அம்பாறை டீ.எஸ். சேனநாயக்கா சமுத்திர நீர்ப்பாசன குளத்தில் நேற்று (21) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்கிரம தலைமையில் நடைபெற்றது.

மூவின மக்களும் ஒன்றினைந்து இலங்கை வாழ் மக்களுக்காகவும், விவசாயச் செய்கை மேற்கொள்வதற்காக மழை வேண்டி மும்மத விசேட பிரார்த்தனைகளும், மதவழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்ட விவசாயிகள் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள். 16 மாவட்டங்களில் நெல் உற்பத்தி செய்கை பண்ணப்படுகின்ற போதிலும் அம்பாறை மாவட்டம் 25 வீதமான நெல் உற்பத்தியை ஈட்டி தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்வதாக அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் 01 இலட்சத்தி 20 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன