ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு முக்கியஸ்தர் ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்திகள் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி வேட்புமனுவில் கையொப்பம் இடுவதற்கு செல்ல முன்னர் ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ளது தேர்தல் காரியாலயத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கினார்.

வேலு குமார் 2015 ஆண்டு பெருந்தோட்ட தொழிலாளர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி மூலம் போட்டிட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.