பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்கத் தீர்மானம்-

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கத் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் வாக்கெடுப்பின் மூலம் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் சம்பள அதிகரிப்பிற்கு ஆதரவாக 14 பேரும், எதிராக 3 பெருந்தோட்ட நிறுவனங்களும் வாக்களித்துள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், வருகை ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது .

சம்பள அதிகரிப்பு விடயம் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ,இத்தீர்மானத்திற்கு அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!