State Bank of India (SBI) ,இலங்கையில் மேலும் இரண்டு கிளைகள்

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா State Bank of India (SBI) ,இலங்கையில் மேலும் இரண்டு புதிய கிளைகளை ஆரம்பித்து தனது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு துறைமுக மாவட்டமான திருகோணமலையிலும் இந்த கிளைகளை இந்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர் (01.11.2023- 03.11.2023) விஜயத்தின் போது திறந்து வைத்தார்.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான இந்த வங்கி , சொத்துக்களின் அடிப்படையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டதாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் பெருநிறுவன மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கிவருகிறது.


2009 இல் 26 ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியா தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது.
இந்த வங்கி தற்போது கொழும்பு கோட்டையில் அதன் தலைமை அலுவலகத்தையும் கொள்ளுப்பட்டி , வெள்ளவத்தை மற்றும் கண்டி ஆகிய கிளைகளுடன் மொத்தமாக ஜந்து கிளைகளுடன் இயங்கி வருகிறது.

பொருளாதார ரீதியில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கிழக்கு துறைமுக மாவட்டமான திருகோணமலையில் ஏற்கனவே எரிபொருள் குதங்களையும் பெற்றுள்ளதுடன், இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு எரிபொருள் வர்த்த நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இம்மதம் முதலாம் திகி (01.11.2023) மேற்கொண்டிருந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்இ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை (03) யாழ் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குப் பயணமானார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன