IPL போட்டித்தொடரின் இறுதிப்போட்டி- முதலாவது தகுதி சுற்றில்   குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்    

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடரின்  இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில்  நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடர்   இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (17 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டின. முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 6 அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் -2 இடங்களை பிடித்த அணிகளான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிசுற்றில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) மோதுகின்றன. இந்த போட்டி தமிழகத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வியடையும்  அணிக்கு இன்னொரு வாய்ப்பாக வெளியேற்றுதல் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் 2 ஆவது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.

சென்னையுடன் ஒப்பிடும் போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சின் கை சற்று ஓங்கியே நிற்கிறது. 10 வெற்றி, 4 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த குஜராத் அணி, லீக்கில் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதே போல் கடந்த ஆண்டில் 2 முறை சென்னையை தோற்கடித்தது. அதாவது சென்னை அணி இதுவரை குஜராத்தை சாய்த்தது கிடையாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன