ICC கிரிக்கெட் பேரவையின்  அனைத்து பிரிவு போட்டிகளின் வெற்றிக்கிண்ணங்களையும் வென்று அவூஸ்திரேலிய அணி சாதனை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  அனைத்து பிரிவு போட்டிகளின் வெற்றிக்கிண்ணங்களையும் வென்று அவூஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ள ஒரே அணியாக மாறியுள்ளது

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவூஸ்திரேலிய அணி இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ஓட்டங்களும்  2 ஆவது இன்னிங்ஸில் 270 ஓட்டங்களும் எடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ஓட்டங்ளுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 444 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 234 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இந்திய அணி இழந்து தோல்வியுற்றது.  

இந்த வெற்றியின் மூலம், ஐசிசியின் ஒருநாள், டி20  சாம்பியன்ஸ் வெற்றிக்கிண்ணம் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 4 வெற்றிக்கிண்ணங்களையும் வென்ற  அணியாக அவூஸ்திரேலியா மாறியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன