GCE A/L தோற்றும் மாணவர்களின் கட்டாய வருகை தொடர்பான புதிய அறிவிப்பு

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக  விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (ஜூலை 20) பாராளுமன்றத்தில் விசேட கடிதத்தை சுட்டிக்காட்டி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே இந்தவருடத்திற்கு மாத்திரம் ஏற்புடையதாக  கருத்தில் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்று வைரசு  மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் போது கல்வித் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

‘நெருக்கடிகளை எதிர் நோக்கிய பல மாணவர்கள் தங்கள் பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் பங்குகொள கொள்ள முடியவில்லை. இந்த விடயங்களை  கருத்தில் கொண்டு பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான  பாடசாலை வருகை விகிதத்தில் திருத்தம் செய்துள்ளோம்” என்றார்.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட பரீட்சார்த்திகளின் கட்டாய வருகை வீதம் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன