Facebook இலங்கையை விட்டு வெளியேறுமா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முகநூல் Facebook, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகளுக்கான ‘மெட்டா’ நிறுவன தலைவர் சேர். நிக் கிளெக் Sir Nick Clegg கிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துக்கூறினார்.

அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறைச் சட்டங்களினால் சமூக ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், Meta போன்ற பிரபல சமூக ஊடக தளங்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன