இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பல பொருட்களின் விலைகள் மேலும் குறையக்கூடும் என்று வர்த்தக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இலங்கை மத்திய வங்கி மேலும் தளர்த்தியுள்ளது. இதற்கு அமைவாக 843 பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த பெறுமதிக்கு சமமான தொகையை வைப்பீடு அல்லது பண வரம்புத் தேவை (margin) நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.