5 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு – சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

தற்போது நிலவும் மழையுடன்கூடிய காலநிலையையடுத்து ஐந்து மாவட்டங்களில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் விடுக்கப்பட்ட 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் தேசிய கட்டிட ஆராய்வு அமைப்பினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நாளை காலை 10 மணி வரை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய பிரதேச செயலகப் பரிவு , காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலகப் பிரிவு, மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவு , கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல, எலபாத, இரத்தினபுரி, குருவிட்ட, கிரியெல்ல, கலவான எஹெலியகொட, பெல்மடுல்ல மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளில் 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவு, மாத்தறை மாவட்டத்தில் முலட்டியன மற்றும் அதுரலிய பிரதேச செயலாளர் பிரிவுகள், காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு, மாத்தளை மாவட்டம் வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, கொலொன்ன பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்லை, தெஹியோவிட்ட, கேகாலை, தெரணியகல, எட்டியந்தோட்டை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலும் இந்த மண் சரிவு எச்சரிக்கை நாளை காலை 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன