2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி

2025ஆம் ஆண்டு முதல் சொத்துக்கான புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேரடி வரியாக விதிக்கப்படும் இந்த சொத்து வரி அதிக சொத்து மதிப்புள்ள நபர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக புதிய மறைமுக வரிகளை அறிமுகப்படுத்துவதற்கோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிப்பதற்கோ அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மறைமுக வரிகள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்காது எனவும், பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!