2023.08.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

2023.08.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01.       பணம் தூய்தாக்கல் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல்களை முறியடிப்பதற்கான இலங்கையின் தேசிய கொள்கை.

2006ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தாபிக்கப்பட்டுள்ள, இலங்கை மத்திய வங்கியின் திணைக்களமாக இயங்குகின்ற நிதிசார் உளவறிதல் பிரிவால் பணம் தூய்தாக்கல்,  பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் சட்டத்தில் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ள ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். பணம் தூய்தாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்புக்களை தடுப்பதற்காக சர்வதேச தரக்கட்டளைகளை தயாரிக்கின்ற சர்வதேச அரசாங்கங்களுக்கிடையிலான நிதிச்செயலாற்றுகை செயலணி, அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 40 பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய இலங்கை, நிதிச்செயலாற்றுகை செயலணியின் பரிந்துரைகளுக்கமைவாக செயற்படுகின்றதா என்பதை நிதிச்செயலாற்றுகை செயலணியின் பிராந்திய நிறுவனமான பணம் தூய்தாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் வலயக் குழுவால் மதிப்பிடப்படும்.

குறித்த குழுவால் மேற்கொள்ளப்படும் பரஸ்பர மதிப்பீடு 2025 மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக மிகச்சிறந்த முறையில் இலங்கையின் நிலைமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 2023 – 2028 பணம் தூய்தாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல்களை முறியடிப்பதற்கான இலங்கையின் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் பணம் தூய்தாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல்களைத் தடுத்தல் பற்றி அடையாளங் காணப்பட்டுள்ள பலவீனங்களுக்கு தீர்வுகளாக அந்தந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் உள்ளடங்கியதான செயற்பாட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.       உவர்நீர் இறால் வளர்ப்புக்காக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான காணியொன்றை இரண்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்கல்

இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற பிரதான வர்த்தக ரீதியான நீர்வாழ் உயிரின வளர்ப்பான உவர்நீர் இறால் வளர்ப்பு மூலம் 2021 ஆம் ஆண்டில் 14,414 மெற்றிக்தொன் உற்பத்திகள் பெறப்பட்டுள்ளதுடன், அதனை 2025 ஆண்டளவில் 50,000 மெற்றிக்தொன்களாக அதிகரிப்பதற்கும், அதன்மூலம் 65,500 மில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டு செலாவணியாக ஈட்டுவதற்கும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. எனினும், நீர்வாழ் உயிரின வளர்ப்புக்களுக்கு எமது நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட காணிகள் காணப்படுவதால் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்களை மேலும் விரிவாக்கம் செய்வதில் சவால்கள் உள்ளன. இச்சவாலுக்கு முகங்கொடுப்பதற்காக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதியில் உயரிய விளைச்சலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நவீன தொழிநுட்பங்கள் அறிமுகப்படுத்தல் போன்ற பல படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 218 ஏக்கர் மற்றும் 30 பேர்ச்சர்ஸ் காணி குறுகியகால வளர்ப்பு வட்டத்தில் விளைச்சலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வனமி வகை இறால் வளர்ப்பு பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. இக்காணியை, அரச பெறுகைச் செயன்முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள டப்ளிவ்.எஸ்.ஆர்.லோவ் அன்ட கே.எம்.என்.அக்டா சர்விஸ் (தனியார்) கம்பனி, மற்றும் நேன்போ ஃயூட்ஸ் (தனியார்) கம்பனிக்கு 109 ஏக்கர் 15 பேர்ச்சர்ஸ் வீதம் அரச விலை மதிப்பீட்டின் அடிப்படையில் 30 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.       கொள்கலன் செயற்படுத்துநர்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்

1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க ‘கப்பற்றொழில் முகவர்களுக்கு, கப்பல் சரக்கனுப்புநர்களுக்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநருக்கு உரிமமளித்தல் சட்டம்’ பல சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ‘கொள்கலன் சாலைகளில் செயற்படுத்துநர்களை ‘சேவை வழங்குநராக’ கருதி ஒழுங்குபடுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, செயற்படுதல், நவீன வர்த்தகம், கப்பலேற்றுதல் மற்றும் வழங்கல் சேவைகளின் தேவைகள் தொடர்பாக கொள்கலன் சாலை செயற்படுத்துநர்களின் அபிவிருத்தி மற்றும் அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மீது ஆரோக்கியமற்ற வகையில் தாக்கங்கள் ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் கொள்கலன் சாலை செயற்படுத்துநர்களால் மேற்கொண்டு செல்லப்படும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வாகம், கட்டணம் மற்றும் கட்டண வீதங்களைத் தீர்மானித்தல், கட்டணங்களை விதித்தல் மற்றும் சேகரித்தலுக்கான ஏற்பாடுகளுடன் கூடிய புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.       2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

வான்வெளிச் சேவையை வழங்குவதற்கான சேவை வழங்குநர்கள் அதிகளவானோர் முன்வருவதற்கு இயலுமாகும் வகையில் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 6(3)c பிரிவை திருத்தம் செய்வதற்காக 2023.03.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.       1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

பீடைகொல்லி தொழிற்றுறையில் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற ஒழுங்குபடுத்தல் முன்னுரிமைகள் மற்றும் அதிகரித்து வரும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அணுகுமுறைகளுக்கு ஏற்புடைய வகையில் 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய சட்டவிரோத பீடைகொல்லிகளை சுற்றாடல் நேயம்மிக்க வகையில் அழிப்பதற்காக செலவாகின்ற அரச பணத்தை தவறாளர்களிடமிருந்து அறிவிடல், தவறாளர்களால் மீண்டும் மீண்டும் மேற்கொள்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகளைப் பலப்படுத்தல் உள்ளிட்ட, ஏனைய ஏற்பாடுகளுடன் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.       பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் போது அடைந்த வெற்றிகள் மற்றும் தொலைநோக்கு

கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக நியமிக்கப்படும் போது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், 2022.07.20 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் கடமைகளை ஆரம்பித்த பின்னர், புதிய அமைச்சரவையுடன் இணைந்து குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு நாட்டில் பொருளாதார உறுதிப்பாட்டை

ஏற்படுத்துவதற்காக, அரச நிதிக் கொள்கை, நாணயக் கொள்கை, மின்சக்தி துறை, கடன் மீள்கட்டமைப்பு, மற்றும் வெளிநாட்டு நிதியிடல் போன்ற துறைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது. அத்துடன், பொருளாதாரத்தை மீள்நிலைக்குக் கொண்டு வந்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து வரும் காலங்களில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற மறுசீரமைப்புக்களுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

07.       ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களின் பங்களிப்புத் தொகையின் அடிப்படையிலான நன்மைகளுக்கான வட்டிவீதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதறகு இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

உள்ளூர் கடன் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் சொந்தமான திறைசேரி பிணைமுறிகளை மீள்கட்டமைப்பதால் குறித்த நிதியத்தின் அங்கத்தவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில், அதன் கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்தால் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த ஐந்து வருட (05) காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்காக செலுத்தப்பட்டுள்ள வருடாந்த வட்டிவீத நன்மைகளைக் கருத்தில் கொண்டு, 2023-2026 வரை தொடர்ந்து வரும் நான்கு (04) வருடங்களுக்கு பங்களிப்புத் தொகை அடிப்படையில் உரித்தான வட்டிவீதத்தை குறைந்தபட்சம் 9மூ வீதமாக அமைய வேண்டுமென நிர்ணயிப்பதற்கு இயலுமாகும் வகையில், 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

08.       கமத்தொழிலுக்காக சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீரை வழங்கல்

உடவளவை நீர்த்தேக்கத்தின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் செய்கைகளுக்குப் போதுமானளவு நீர் இல்லாமையால், சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீரை விநியோகிப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பாக கடைப்பிடிக்கக் கூடிய மாற்று வழிமுறைகள் பற்றி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்களால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாற்று வழிமுறைகள் தொடர்பாக ஆழமாகக் கலந்துரையாடிய பின்னர், தற்போது சமனலவாவி நீர்த்தேக்கத்தில் எஞ்சியுள்ள நீரில் இயலுமான அளவு விவசாய நடவடிக்கைகளுக்காக விநியோகிப்பதற்கும், அதனால் மின்னுற்பத்தியில் மேலெழும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, தேவையான மின்சாரத்தை தனியார் துறையிடம் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன