2023 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை ஒன்லைன் இணையவழி மூலம் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

6ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினம் நீடிக்கப்பட மாட்டாதென்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன