2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை இன்று902) ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி வரை பரீட்சை இடம்பெறவுள்ளது. மேலைத்தேயஇ கிழைக்குத்தேய சங்கீதம்இ உள்நாட்டு பரதநாட்டியங்கள்இ மும்மொழிகளிலுமான நாடகம் மற்றும் அரங்கேற்றக் கலை பற்றிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்து 355 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடத்தப்பட இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.