தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 27 வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாக பல்கலைகழக ஒலுவில் வளாகம் எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சமூகமயப்படுத்தி மக்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே பொது மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு 350 மில்லியன் ரூபா செலவில் பல்கலைகழக உத்தியோகத்தர்களுக்கான 4 மாடிகள் கொண்ட இரு வீட்டுத் தொகுதிகள் திறப்பு விழாஇ மர நடுகை, மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள்இ குறுந்திரைப்பட வெளியீடுஇ புதிய கண்டுபிடிப்புகள்இ புத்தக கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டி என்பன நடைபெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.