2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் (ஆண்) போட்டி அதாவது 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய மாநிலமான குஜராத்தில் இன்று (05) ஆரம்பமாகிறது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை இந்திய நாணயத்தில் ரூ. 83.10 கோடியாகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கிண்ணத்துடன் , பரிசாக ரூ.33.24 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 16.61 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறும் இரு அணிகளுக்கும் தலா ரூ.6.65 கோடி வழங்கப்படும்
முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தரப்பில் முக்கிய வீரர்கள் இன்று விளையாடமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் நியூசிலாந்து அணியில் இடம்பெறமாட்டார்கள் என கூறப்படுகின்றது.
மறுபுறம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை துடுப்பாட்ட வீரரான பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதில் சந்தேகம் உள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையத்திலான இங்கிலாந்து அணியில் ஜொனி பேர்ஸ்டோவ்இ டேவிட் மாலன்இ ஜோ ரூட்இ பென் ஸ்டோக்ஸ் அல்லது ஹாரி ப்ரூக்இ லியம் லிவிங்ஸ்டன்இ மொயீன் அலிஇ சாம் கர்ரன்இ கிறிஸ் வோக்ஸ்இ அடில் ரஷித்இ மார்க் வூட் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம் டொம் லதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டெவோன் கொன்வே, வில் யங், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம் அல்லது ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, மாட் ஹென்றி, டிரெண்ட் போல்ட்இ லோக்கி பெர்குசன் ஆகியோர் விளையடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 10 அணிகளுக்கிடையில் 48 போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஒன்றரை மாதம் நடைபெற உள்ளது 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர். முதல் முறையாக இந்தியா மட்டும் தனித்து நடத்துகின்றது.உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது.
உலகக் கிண்ண தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, பங்காதேஷ் , இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இங்கிலாந்தில் சென்ற முறை நடந்த ரவுண்ட் ராபின் முறையிலேயே தற்போதும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணியும், மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும். லீக் போட்டிகளின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், மும்பை வான்கடே மைதானம், பெங்களூரு சின்னசாமி, சென்னை சேப்பாக்கம், கொல்கத்தா ஈடன் கார்டன் , டெல்லி அருண் ஜெட்லி மைதானம், புனே, லக்னோ, தரம்சாலா, ஐதராபாத் மைதானங்களில் 40 போட்டிகள் நடைபெறுகின்றன .அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்ப போட்டியும், இந்தியா, பாகிஸ்தான் போட்டி, இறுதிப் போட்டி உள்ளிட்ட 5 முக்கிய போட்டிகள் ரசிகர்களை பெரிதும் கவரும்.
50,000 ரசிகர்கள் அமரக்கூடிய சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்திய அணி தனது போட்டியை வரும் 8ஆம் திகதி இங்கிருந்துதான் தொடங்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா போட்டிகள் தவிர, அக்டோபர் 14-ஆம் திகதி நியூசிலாந்து- பங்காளதேஷ், அக்டோபர் 18-ஆம் திகதி நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அக்டோபர் 23-ஆம் திகதி பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான், அக்டோபர் 27-ஆம் திகதி பாகிஸ்தான்- தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் போட்டிகள் சென்னை ரசிகர்களுக்கு துக்கியமானதாக அமையவுள்ளரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் 9 ஆட்டங்களையும், 9 வௌ;வேறு மைதானங்களில் விளையாடுகிறது.
கடந்த உலகக் கிண்ண தொடரில் அணித்தலைவர்களாக செயல்பட்டவர்களில், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மட்டுமே நடப்புத் தொடரில் அணித்தலைவராக களமிறங்குகிறார். நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது