யாழ்: சின்ன வெங்காயச் செய்கையில் பரவும் நோய்

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சின்ன வெங்காயச் செய்கையில் பரவும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத் திணைக்களத்திற்கு விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் சின்ன வெங்காயச் செய்கையை பாதித்துள்ள நோய் குறித்த தகவல்கள் ஊடகங்கள் ஊடாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நோய் நிலை வெங்காயச் செய்கையில் காணப்படும் Diptera நோயாகக் கருதப்படுவதால், இந்நோயைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் சுன்னாகம், தெல்லிப்பளை, மடகல், சங்கானை, சல்வெளி, கோப்பாய், வடமராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள சின்ன வெங்காயத் தோட்டங்களில் இந்நோய் காணப்படுகின்றது.
இந்நோய் தொடர்பான கண்டறிந்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளருக்கு விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. மாலதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நோய் நிலை Diptera அல்லது வெங்காய Onion Maggot மங்கையால் ஏற்படக்கூடும் என்பதால், கட்டுப்படுத்த உரிய நோய் தடுப்பு முறைகளை கடைப்பிடிப்பது குறித்து வெங்காய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன