இலங்கையர் 10,000 பேருக்கு மலேஷியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கொண்டுள்ளார்.
மலேஷியாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறி, அந்நாட்டின் மா நகரத்திற்குள் பிரவேசிக்கும் போது வானளாவிய கட்டிடங்கள் காணப்படும் கட்டிடத்தொகுதிகளில் தனித்துமாக காட்சியளிக்கும் கட்டிடம் ஒன்றை எம்மால் அவதானிக்க முடியும் . அது தான் நவீன மலேசியாவின் சின்னமாக திகழும் , PETRONAS Twin Tower கோபுரமாகும்.
சுமார் நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பெலேக் சுரங்கங்கள் நிறைந்த பகுதி , வெள்ளம் மற்றும் தீ விபத்துகளால் அடிக்கடி பாதிக்கப்பட்ட பிரதேசமாக காட்சியளித்தன. இந்த பகுதியான கோலாலம்பூர் இன்று , உலகின் வளர்ச்சிக்கண்ட பாரிய நகரங்கள் மத்தியில் வளர்ச்சிக்கண்ட மாநகரமாக மேம்பட்டுள்ளது. இந்த பாரிய அபிவிருத்தியில் அங்கு காணப்படும் பெட்ரோனாஸ் கோபுரம் இதனை முன்நிலை ப்படுத்துகிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.
1957ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியில் இருந்து மீண்ட மலேஷியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் சின்னமாக பெட்ரோனாஸ் கோபுரத்தை குறிப்பிடுவதில் எந்த தவறுமில்லை. இந்த கோபுரத்தை உருவாக்குவற்கான ஆலோசனை இங்கையர் ஒருவருக்கு உரித்தானதாகும். மலேஷியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த கிருஷ்ணனின் இந்த யோசனை இன்று மலேஷியாவின் முன்னணி அடையாளச்சின்னமாக காட்சியளிக்கின்றது.
திரு.ஆனந்த கிருஷ்ணனின் தாத்தா ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலேஷிய அரசாங்க தொழில் திணைக்களத்தில் பணிபுரிவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தார். அதன்பின்னர் அவரது விருப்பத்துக்கேற்ப அர்ஜென்டினாவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் சீசர் பெல்லி இந்த கோபுரத்தை வடிவமைத்ததாக இந்த கட்டிடம் குறித்த வரலாற்றை எண்பத்தைந்து வயதான ஆனந்த கிருஷ்ணன் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து 1993 இல் இதற்கான கட்டுமானப் பணிகள் அரம்பிக்கப்பட்டன. கட்டுமான பணிகள் 1996 ஆண்டில் நிறைவடைந்தன. 1999 ஆம் ஆண்டில், இலங்கை மற்றும் மலேஷியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டு , மலேஷிய பிரதமர் மகாதீர் பின் முகமது இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
காலி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் மலேஷியாவுக்குச் சென்ற இலங்கையர்கள் பல நூறு வருடங்களாக மலேஷியாவில் வணிகத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல், தொழில் துறைகளில் பணியாற்றுவதற்காகவும் இலங்கையர்கள் அன்று அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான நிகழ்வுகளாகும். ஆங்கிலம் மற்றும் தொழில்முறை அறிவைக் கொண்ட இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்கான வசதி அப்போது கிட்டியது. பிரித்தானியர்கள் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்ற போது இலங்கை நில அளவையாளர்கள் அந்த பணிக்காக மலேஷியாவுக்கு வரவழைக்கப்பட்டனர். இலங்கை மலைப்பகுதியில் புகையிரதப் பாதை அமைப்பதில் அனுபவம் பெற்ற பலர் இக்கால்பகுதியில் இலங்கையில் இருந்ததால் மலேஷியாவில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்திற்கு அப்பால் 80,000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட ஸ்ரீ அலங் என்ற தீவு (Carey Island) -, முழமையாக பெருந்தோட்டப்பகுதியாக எட்வர்ட் வாலண்டைன் கேரி என்ற பிரபல தேட்டத் துரையால் மேம்படுத்தப்பட்டது.
சரவாக்கின் கரையோரப் பகுதிகள் 16ஆம் நூற்றாண்டில் புருனே பேரரசின் செல்வாக்கின் கீழ் வந்தது. இதன் அடிப்படையில் சரவாக்கின் வரலாற்றை ஆராய்ந்த சமன் அதாவுதஹெட்டிய, இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலேஷியா சென்றதை குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள இலங்கையர்களைப் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டு நூலை எழுதிய எச்.எம்.ஏ. டி சில்வா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கையைச் சேர்ந்த தச்சர்கள், மேசன்மார் மற்றும் ஓவியர்கள் ரயில் பெட்டிகள், வண்டிகள் மற்றும் ரயில் நிலையங்களுடன் தொடர்புடைய கட்டிடங்களை வடிவமைப்பதற்காக அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டனர். ரயில் பெட்டி முழுவதும் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புச் சட்டங்களில் மரத்தால் கட்டப்பட வேண்டும். இலங்கை தச்சர்கள் ரயில் பெட்டிகளை அமைப்பதில் வல்லுநர்கள். மதகுகள் மற்றும் மதகுகள் அமைப்பதிலும் , அன்றைய இலங்கைத் தொழிலாளர்களை உள்ளடக்கி சிலோன் ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது’ என்று மலேஷியாவில் உள்ள இலங்கையர்களைப் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டு நூலை எழுதிய எச்.எம்.ஏ. டி சில்வா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேப் போன்று அன்று மலேஷியாவில் பயிற்சி பெற்ற இலங்கைத் தொழிலாளர்களுக்கு அந்நாட்டு தொழில் துறையில் மிக சிறப்பான இடம் இருந்தது. மலேஷிய தொழில் சந்தையில் இலங்கையின் திறமையான தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்த தாக நுலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார அவர்கள் மலேசியாவுடன் நெருக்கமாக தொடர்புகளை தற்போது மேற்கொண்டுவருகிறார்.இலங்கைத் தொழிலாளர்களுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் பெறக்கூடிய கூடுதலான தொழில் வாய்ப்புகளுக்காகவே இந்த முயற்சியை அமைச்சர் முன்னெடுத்துள்ளார்.
அமைச்சுப் பணிகளைப் பொறுப்பேற்ற உடனேயே இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் திரு.டாங் யாங் தாய் அவர்களுடன் கலந்துரையாடி மலேஷிய வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையமொன்றை ஆரம்பிக்க அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதேவேளை, மலேஷியாவின் பாதுகாப்புத் துறையில் 10 ஆயிரம் வேலை வாய்ப்புகளை இலங்கைத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான அடிப்படை விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் மூலம் தற்போது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடு எதிர்கொண்ட டொலர் நெருக்கடியுடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை மேலும் வலுப்படுத்திக்கொண்டு இலங்கைக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் மலேஷியா தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில், மலேஷியா கண்டுள்ள உயர்வான வளர்ச்சியை இலங்கையின் தகவல் தொழிநுட்பத் துறையுடன் ஒன்றிணைப்பதற்காக மலேஷியா எப்போதும் பங்களிப்பது டிஜிட்டல் இலங்கையை உருவாக்கும் ஜனாதிபதியின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காகவே யாகும்.
சமூக, பொருளாதார மற்றும் தொழிநுட்ப வளர்ச்சியின் சுதந்திர மலேஷியா அடைந்துள்ள நன்மைகளை இலங்கையுடன் பரிமாறிக் கொள்வதற்காகவே இரு நாடுகளுக்குமிடையிலான சகோதரத்துவப் பிணைப்பு மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
சஞ்சய நல்லபெரும
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் ஊடக செயலாளர்