ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை  திட்டம் இல்லாமை குறித்து  கோப் குழுவின் தலைவர் அதிருப்தி

2022.12.06 ஆம் திகதி கோப் குழுவின் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைப்பு

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.05.25 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் மீளாய்வு இடம்பெற்றது.

இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.  

பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும் இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டுத் திட்டம் இல்லாமை

நிறுவனம் தொடர்பான திட்டவட்டமான கூட்டுத் திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறு தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் இல்லாமை குறித்து குழுவின் தலைவர் மிகவும் அதிருப்தியை வெளியிட்டார். வைத்தியசாலையின் மாதிரியின் தன்மை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வைத்தியசாலை எந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் சபை மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு தெளிவான கருத்து இல்லை என்பது இதன்போது அவதானிக்கப்பட்டது. வர்த்தகப் பிரிவு, மனிதவளப் பிரிவு, சந்தைப்படுத்தல் அல்லது வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இல்லாமை  குறித்து குழுவின் தலைவர் வினவினார். இது அரசாங்க வைத்தியசாலையா, இலாபம் அரச வர்த்தக நிறுவனமா அல்லது இந்த இரண்டும் சேர்ந்த ஹைபிரிட் நிறுவனமா என்பது தொடர்பில் அவர் மீண்டும் மீண்டும் வினவினார். வருகைதந்த அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை வைத்தியசாலை சபை ஏற்றுக்கொண்டது.

மேலும், சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு தொடர்பில் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் ஆலோசனையோ அல்லது அறிவித்தலோ அறிவிக்கப்படாமை காரணமாக, ஆட்சேர்ப்பு செயல்முறை தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. குறைந்தபட்சம் ஆட்சேர்ப்பை நியாயப்படுத்தக்கூடிய சரியான ஆட்சேர்ப்பு நடைமுறை (SOR) இல்லை என்பதுடன் அது வைத்தியசாலையை கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுவதாகவும் காணப்படுகின்றது.

கோப் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட மற்றும் விரிவான விசாரணையின் பின்னர், வைத்தியசாலைக்குப் பொருத்தமான மாதிரியை விரைவாகத் தீர்மானிக்க கோப் குழுவின் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தலைவரினால் தீர்மானிக்கப்பட்டது.  அதனையடுத்து, கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுத் திட்டத்திற்குப் பதிலாக, முறையான கூட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஒரு தொழில்முறை அமைப்பிடம் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் மேலும் ஆலோசனை வழங்கினார்

கடந்த கோப் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை

கடந்த கோப் குழு கூட்டத்தை அடுத்து வைத்தியசாலையின் சபையினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம் கடந்த காலத்தில் நட்டமடைந்த வரலாற்றைக் கருத்தில் கொண்டு நிர்வாகத் திறன் கொண்ட தொழில் வல்லுநர்களை பணிப்பாளர் சபைக்கு நியமிப்பது தொடர்பிலும் நியமிக்கும் நடைமுறை தொடர்பிலும் அறிக்கை கோரப்பட்டிருந்தது. எனினும், இது தொடர்பில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.

வைத்தியசாலை வளாகத்திற்கு சொந்தமான காணியின் அளவை திட்டவட்டமாகக் கண்டறியாமை

நில அளவைத் திணைக்களத்தினால் சரியான கணக்கெடுப்பு ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின்னர், சட்டவிரோத குடியிருப்பாளர்கள் காணியின் பகுதிகளை கைப்பற்றியுள்ளதுடன்  இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 2015 இல் புதிய கட்டடம் அமைப்பதற்குக் காணியின் சரியான திட்டமொன்று தேவைப்பட்டது. அதனையடுத்து காணியை அளப்பதற்கு தனியார் அளவையாளர் ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சில காலம் சென்று உண்மையான திட்டம் கிடைக்கப்பெற்றுள்ளமை புலப்பட்டது.

எனினும், பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் சபையின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட புதிய அளவைத் திட்டத்தில் சட்டவிரோத குடியிருப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலைமையை கண்டறிந்து, அதற்கு அதிக முன்னுரிமை அளித்து நியாயமான தீர்வை முன்வைக்குமாறு மேலே குறிப்பிடப்பட்ட கோப் குழுவின் தலைவர் உப குழுவுக்கு ஆலோசனை வழங்கினார்.

செயற்பாட்டு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு 2023.05.20 ஆம் திகதி மீண்டும் கோப் குழுவே முன்னிலையில் ஆஜராகுமாறு இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேலும், கோப் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவினால் 2023.07.20 ஆம் திகதி வைத்தியசாலையின் சபையை மீண்டும் அழைத்து காணி மற்றும் கோரப்பட்ட அறிக்கைகள் தாமதமடைவது தொடர்பில் கண்டறிவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பெறுமதி தொடர்பில் இதன்போது குழுவின் தலைவர் வலியுறுத்தினார். தற்பொழுதும் ஒரு மில்லியனுக்கும் குறைந்த பெறுமதியின் இருதய சத்திர சிகிச்சையை இந்த வைத்தியசாலையில் செய்துகொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர், நிறுவனத்தை முறையாகக் கட்டமைத்து நோக்கம் மற்றும் சரியான நிறுவன வழிகாட்டலுக்கு விரைவாக முன்னுரிமை வழங்குமாறு பணிப்பாளரிடம் வேண்டிக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன