வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் மறுசீரமைக்கப்படவுள்ளது

பஸ் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கி வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் மறுசீரமைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக ராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவிக்கையில். இந்த சுற்று நிரூபத்தின் ஊடாக பத்து வருடங்கள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்களின் விலை குறைவாக உள்ள போதும், அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான செலவு அதிகமாகும். ஆகையினால் குறித்த சுற்றுநிரூபம் பற்றி மீண்டும் ஆராயப்பட்டுள்ளது என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன