வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை  டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தல் 

புலம் பெயர் தொழிலாளர்களை அடிமைகளாக்காமல் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை  டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய அக்மீமன தயாராதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள ராவய, இலங்கை மக்கள் கட்சி மற்றும் புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆகியன இணைந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு முன்பாக மௌனப் போராட்டத்தை நடாத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைப்பின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்போது நாட்டின் முக்கிய வருமானம் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு வருமானம். அவை தான் இந்த நாட்டை வாழ வைக்கின்றது.  பலம்பெயர் தொழிலாளி வெளிநாடு சென்ற பிறகு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு அங்குள்ள எது தூதரகத்திற்கு உள்ளது. ஆனால் எமது நாட்டு தூதர்கள் வெளிநாடுகளுக்கு சென்று சூதாட்டம் ஆடுகின்றனர். ஆனால் நாட்டு மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளிக்கும் நீதி கிடைக்கவில்லை என்றும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் சங்கை;குரிய அக்மீமன தயாராதன தேரர் கூறினார்.

இன்று புலம் பெயர்ந்த தொழிலாளி அடிமைகளாக நடத்தப்படுகின்றான். . 24 மணி நேரமும் வேலை. அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முறையான வேதனம் வழங்கப்படுவதில்லை தொழிலாளர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் அரசு இவற்றுக்கு தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பொறுப்பு அரசிடம் உள்ளது. அதற்கு திட்டம் தீட்டவும். இது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதைக் காணமுடிகிறது. இலங்கைப் ,வெளிநாட்டிற்குச் செல்லும்போது அவர்கள் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் மயமாக்குங்கள். அவர்களுக்கு  ஏதாவது  தகவலை தெரிவிக்க வேண்டியிருக்கும் போது, அதனை எஸ்.எம்.எஸ். குறுஞ் செய்தி மூலம் அனுப்புவோம் , ஒரு எண்ணுக்கு குரல் செய்தி அனுப்பப்பட்டால் தொழில் அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், முகவர் நிறுவனம் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கவும். தொழிலாளர்களை நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. அவர்களுக்கு உரிமை கொடுங்கள். காப்புறுதி  வசதிகளை வழங்கவும்.; இணையம் மூலம்  இணைக்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குங்கள்  அதே நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களால் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட வேண்டும் என்றும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் சங்கை;குரிய அக்மீமன தயாராதன தேரர் மேலும் கூறினார்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன