புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை விரைவில் டிஜிட்டல் மயமாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி காலியில் பல பெண்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து மே தின பேரணியில் ஈடுபட்டன.
ஜெஸ்மின் மகளிர் அமைப்பின் தலைவி திருமதி; முகமத் ஹுசைன் நஸ்மியா , கெமி காந்தா பெரமுன அமைப்பின் தலைவி சிரியானி பதிரகே ,காலி வர்த்தக மகளிர் அமைப்பின் தலைவி திருமதி வாசனா பிரியந்தி ஆகியோர் ஒன்றிணைந்து சுமார் ஒரு மணித்தியாள பேரணியை காலி பஸ் தரிப்பு நிலையத்தில் நடத்தினர். இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் அடங்களாக பெண்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
“சந்தேகம் மற்றும் பயமின்றி வெளிநாடுகளில் தொழில் செய்ய வழி செய்யுங்கள்,
நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் பெண்களை காப்பாற்றுங்கள்,
வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை டிஜிட்டல் மயமாக்குங்கள்
ஆள் கடத்தலுக்கு அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது .
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குதல்”
உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியதுடன் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினர்.