வீதி கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் வேக கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றம்

தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில இலங்கையின் வீதி கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் வேக கட்டுப்பாடு பற்றிய விதிமுறைகளை மாற்றியமைப்படவுள்ளது.
அமுலில் இருக்கும் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் 2012ஆம் ஆண்டில் வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டவை என்று போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வேக கட்டுப்பாடு பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன