வாகன அனுமதி பத்திரம்: விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை

வாகன அனுமதி பத்திரத்தை விரைவில் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதெடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை தாமதம் இன்றி பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப் பத்திர அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த அட்டைகளை அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன