வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட அரிய வகை கடல் ஆமை

மன்னாரில் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று (1) மாலை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிவ் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்டுளார்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பிரதான வீதி ரெலிக்கொம் சந்தி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வாகனத்தை சோதனை செய்தபோது ,வாகனத்தில் சூட்சுமமான முறையில் ஆமை மறைத்து வைக்கப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. .

மீட்கப்பட்ட கடலாமை நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன