வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் சிலருக்கு அம்மை நோய்

வவுனியா சிறைச்சாலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

சிறையில் உள்ள ஆறு கைதிகளுக்கு அம்மை நோய் எற்பட்டதினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் சந்தேகத்திற்குரிய பல நோயாளிகள் காணப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன