வறட்சி ,வெள்ளம் உற்பத்திகளுக்கு பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு

உற்பத்தி செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகளுக்குள்ளான விவசாயிகளுக்கு ஆகக்கூடிய நட்டஈட்டு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அடைமழை காரணமாக தமது பயிர் நிலங்களில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈட்டு கொடுப்பனவுகள் விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வறட்சி காரணமாக பயிர் நிலங்களில் பாதிப்புகளை எதிர்கொண்ட விவசாயிகளின் சேத விபரங்கள் தொடர்பில் மதிப்பீட்டு பணிகளை பூர்த்தி செய்ய முயற்சித்த வேளையிலேயே இந்த மழைக்காலநிலை குறுக்கிட்டுள்ளது. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பயிர் நிலங்களுக்கு மேலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. காலநிலை அவதான நிலையம் முன்னர் வெளியிட்ட அறிக்கையின்படி, நவம்பர் மாதளமவில் மழைவீழ்ச்சி இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த காலத்திற்கு முன்பாகவே செப்டெம்பர் மாதத்தில் அதிகமழை பெய்துள்ளது. இதனாலலேயே விவசாயிகளுக்கு தமது அறுவடையை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியாமல் போனது. சேதமடைந்த பயிர் நிலங்களுக்காக நட்டஈட்டு கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன