வருடத்தில் 3,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

இலங்கையில் ஆண்டுக்கு 12,000 பேர் இறக்கின்றனர். இவர்களில் கால் பகுதியினர், அதாவது  சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். தினமும் சுமார் 7 முதல் 8 பேர் வரை உயிரிழக்கின்றனர்

இந்த வருடத்தின் முதல் எட்டுமாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற ஆயிரத்து 427 விபத்துக்களில்  ஆயிரத்து 613 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் 632 மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகும் என்று பொலிஸ் போக்குவரத்து நிர்வாக பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட நேற்று (11)  கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

கடந்த வருடத்தில் இரண்டாயிரத்து 418 விபத்துக்களில் இரண்டாயிரத்து 538 பேர் உயிரிழந்திருப்பதாக அவர் கூறினார். கடந்த வருடம் ஆயிரத்து ஒன்பது மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 171 பாடசாலை மாணவர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர். இவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர். 15 பேர் நீண்டகால உபாதைக்கு உள்ளானதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். கடந்த வருடத்தில் பாதுகாப்பான தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 684 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாக  பொலிஸ் போக்குவரத்து நிர்வாக பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன