எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு தீர்வு காணப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அலரி மாளிகையில் இன்று (28)நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
சமுர்த்தி அதிகார சபையை ஒரு திணைக்களமாக இணைத்தமையினால் எழுந்துள்ள இந்த பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
சமுர்த்தி திணைக்களத்திற்கு உள்வாங்கப்படும் போது 44உ(11) பிரிவின் கீழ் தமது விருப்பத்தை வெளிப்படுத்திய உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 60 வீத ஊழியர் சேமலாப பங்களப்பு நிதியை செலுத்துவதில் 4 வீத மேலதிக வட்டியை அறவிட தீர்மானித்துள்ளமை நியாயமற்றதாகும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் பதவிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கைக்கான அங்கீகாரம் இ சமுர்த்தி உத்தியோகத்தர்களை எம். என் 02 சம்பள அளவுத்திட்டத்தில் நிறுவுதல்இ பதவி உயர்வு முறைமையை அமைத்தல்இ சமுர்த்தி அபிவிருத்தி சேவைக் காலத்துடன் சமுர்த்தி ஊழியர் சேவைக் காலத்தை சேர்த்தல்இ விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிக்கான நிலுவைத் தொகையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கூட்டு வட்டியுடனான 4 வீத மிகை கட்டணம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தடையாக உள்ள கட்டளைச் சட்டங்கள்இ சுற்றறிக்கைகள் மற்றும் அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான விடயங்களை அதிகாரிகள் விளக்கியதுடன்இ நாடு நெருக்கடியை எதிர்நோக்கும் இத்தருணத்தில் இந்த பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பு அவசியம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி திணைக்களத்திற்கு உள்வாங்கப்பட்டதைப் போன்று வேறு அதிகார சபைகள் திணைக்களத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பின் இவ்வாறான சம்பவங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடியும் என பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க இங்கு குறிப்பிட்டார். மேலும்இ அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதிருப்பதுஇ செயலாற்றுகை பின்னடைவதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் கே. டி. என்.ரஞ்சித் அசோக, பெண்கள் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். பீ. பி. திலகசிறிஇ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு