வட்டி வீதம் மேலும் குறையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று(08) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், பொருளாதார நிலை ஸ்திர நிலையையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பணவீக்கம் வேகமாக குறைந்து வருவதால், பொது மக்களுக்கு வங்கிகள் மூலம் அந்த நிவாரணம் கிடைக்க்கூடியதாக இருக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களில் வட்டி விகிதம் வெகுவாக குறைவடைந்தது இதில் விசேடமாக நேற்றைய தினம் அதிகபட்ச விகிதம் இடம்பெற்றிருப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.