வடமாகாண உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, யாழ்.வணிகர் கழகத்தில் தனியான ஒரு செயற்பாட்டு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் வணிகர்கழகத் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.
இந்த ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளும், ஆலோசனைகளும், தமது கழகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் முதல் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி, விமானத்தில் பொருட்களை ஏற்றுதல் உள்ளிட்ட சேவைகள் நடைபெறவுள்ளன.
வடமாகாண உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி நிலவுவதாகவும், புலம்பெயர் உறவுகள் உள்ளுர் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தயாராகவுள்ளதாகவும் கூறினார்.
உள்ளுர் உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு யாழ்.வணிகர் கழகம் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.