வடக்கு மாகாணத்திலும் டெங்கு

வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 972 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்;த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 638 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 84 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 74 பேரும், மன்னார் மாவட்டத்தில் 70 பேரும், டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன