வங்கி வட்டி வீதம் 3.5வீதமாக குறைக்கப்படவிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

இவ்வருட இறுதிக்குள் வங்கி வட்டி வீதம் 3.5வீதமாக குறைக்கப்படவிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.நாட்டின் பணவீக்கம் ஒற்றை பெறுமதியை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வங்கி வட்டி வீதத்தை குறைக்குமாறு வர்த்தக வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் கடனுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரமிட் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று; அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பிரமிட் மோடி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன