ரூ.2000 இந்திய நாணயத்தாள்கள்: 4 மாத கால அவகாசம்

நிர்ணயிக்கப்பட்ட செப்டம்பர் 30ஆம் திகதிக்குப் பிறகும் ரூ.2000 இந்திய நாணயத்தாள்கள் செல்லுபடியாகும், 4 மாதம் அவகாசம் இருப்பதால் மக்கள் அவசரமின்றி வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்’ என்று இந்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் மத்தியில் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நாணயத்தாள்கள்  திரும்பப் பெறுவதாகவும், அவற்றை செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கடந்த 19ஆம் திகதி அறிவித்திருந்தது. இந்த நாணயத்தாள்களை ஒருவர் தனது சொந்த வங்கி கணக்கில் வைப்பீடு செய்யலாம், வங்கியில் நேரடியாக கொடுத்தும் மாற்றிக் கொள்ளலாம். ஒருமுறை அதிகபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கான ரூ.2000 நாணத்தாள்களை மாற்ற முடியும். அதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. வங்கியில் ரூ.2000 நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன