ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று (04) பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்தார்.
காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்துமூலிகைகள், நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் முடங்கியுள்ளமை குறித்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வசதிகள் இல்லாமை குறித்தும் ஆதிவாசிகளின் தலைவர் பிரதமரிடம் தெரிவித்தார்.
ஊருவரிகே வன்னிலஎத்தோ தலைமையில்அனைத்து ஆதிவாசி குடியேற்றங்களின் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து இந்தப் பிரச்னைகள் குறித்து விரிவான முறையில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் துறை மற்றும் தேசிய தொழிலாளர் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன் குறிப்பிடத்தக்க சந்திப்பை நடத்தினார். 2023 ஆம் ஆண்டின் முக்கிய முடிவுப் பகுதியான ‘வேலையின் கண்ணியம்’ முன்னோக்கி செல்லும் வழியைத் திட்டமிடுவதில் கவனம் செலுத்தப்பட்டது. ஆலோசகர்கள் ஷான் யஹம்பத் மற்றும் பத்மினி ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்