யாழ். மாவட்டத்தில்  வீடுகளில் குடியமராதவர்களின் வீடுகளை திரும்பப் பெற திட்டம்

யாழ் மாவட்டத்தில் அரச வீட்டுத் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராதவர்களின் வீடுகளை திரும்பப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் பயனாளிகள் வசிப்பதில்லை என்ற பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சங்கானை, தெல்லிப்பழை, சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களில் அதிகளவிலான வீடுகள் பயனாளிகள் இன்றி காணப்படுகிறது.

அரச வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டதன் நோக்கத்தை பயனாளிகள் பூர்த்தி செய்யவில்லையாயின் அதனை மீளப் பெறுவதற்கு சுற்று நிருபம் இருப்பதாக வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன